கனடாவில் சிறார்கள் தொடர்பில் புதிய அச்சம்: மருத்துவர்கள் கவலை

சிறார்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் Strep A தொற்று கனடாவில் தீவிரமாக அதிகரித்துவருவதாக மருத்துவ சமூகம் அச்சம் தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ பொது சுகாதார அமைப்பு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் உறுதி செய்துள்ளது. மட்டுமின்றி, மாண்ட்ரீலில் உள்ள சுகாதார அதிகாரிகள், இந்த தொற்று தொடர்பில் அறிகுறிகள் காணப்பட்டால் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

டிசம்பர் 15 வரையில் மாண்ட்ரீலில் நான்கு சிறார்கள் Strep A தொற்றுக்கு இலக்கானதாகவும், அதில் இருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Strep A தொற்று பொதுவாக காணப்படும் பாக்டீரியா என்றாலும், அரிதான சந்தர்ப்பங்களில் அது பாதிப்பை ஏற்படுத்தும் போது மிகப்பெரிய ஆபத்தாக உருமாறுகிறது என நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

கனடாவில் சிறார்கள் தொடர்பில் புதிய அச்சம்: மருத்துவர்கள் கவலை | More Kids May Be Getting Sick Doctors Worry

 

Strep A தொற்றானது பொதுவாக மூக்கு, தொண்டை மற்றும் தோலின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. சிறார்களுக்கு Strep A தொற்று பாதிப்பு இருந்தும், எந்த அறிகுறியும் தென்படாத போது அவர்கள் மிக சாதாரணமாகவே புழங்குவார்கள்

ஆனால், இந்த தொற்றானது ரத்த நாளங்களில் புகுந்து, ரத்தத்தில் கலக்கும் என்றால் ஆபத்தை ஏற்படுத்தும். பிரிட்டனில் Strep A தொற்று பாதிப்புக்கு இதுவரை 19 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

பல சிறார்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அங்குள்ள சுகாதாரத்துறை இது தொடர்பில் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்