சீனாவிலிருந்து கனடா வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

சீனாவிலிருந்து கடாவிற்கு வருகை தரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து கனடா வரும் பயணிகள் கோவிட் பரிசோதனை செய்து கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் நெகடிவ் அறிக்கை காணப்படும் பயணிகளுக்கு மட்டுமே கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.

சீனாவிலிருந்து கனடா வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் | Temporarily Require Negative Covid 19 Test

 

கனேடிய அரசாங்கம் தற்காலிக அடிப்படையில் இந்த நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

எதிர்வரும் 5ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. சீனா, ஹொங்கொங் மற்றும் மாகோ ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த கோவிட் பரிசோதனை சான்றிதழ் நடைமுறை அறிமுகம் செய்யப்படுகின்றது.

2 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து விமானப் பயணிகளும் இவ்வாறு கோவிட் நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்து செல்கின்ற நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களும் இந்த பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமானது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்