கால்பந்து ஜாம்பவானின் பிரியா விடை – விடைபெறுகிறார் பீலே…!!(படங்கள்)

பிரேசிலின் மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அவரது உடல் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரண்ட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இன்று, அவரது உடல் நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மேலும் பீலேவின் நினைவாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் கால்பந்து மைதானங்களில் ஒன்றிற்கு பீலேவின் பெயரை வைக்குமாறு உலக நாடுகளை ஃபிஃபா கேட்கவுள்ளதாக விளையாட்டு நிர்வாகக் குழுவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.