சர்வதேச போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்ற ஈரான் வீராங்கனை! விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை சாரா காதெம், நாடு திரும்பக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில், மஹ்சா அமினி மரணத்தை தொடர்ந்து ஹிஜாப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கஜகஸ்தானில் நடைபெற்ற செஸ் போட்டியில் வீராங்கனை சாரா காதெம், ஹிஜாப் அணியாமல் பங்கேற்றுள்ளார்.

சர்வதேச போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்ற ஈரான் வீராங்கனை! விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் | Iran Hijab Protest

இதனால், நாடு திரும்பக்கூடாது என சாரா காதெமுக்கு பலர் தொலைபேசி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சாரா காதெம் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.