ஹெலிகொப்டர் விபத்தில் அமைச்சர் உட்பட 16 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் கீவ் நகருக்கு அருகில் உள்ள ப்ரோவரி நகரில் உள்ள ஆரம்ப பாடசாலை மற்றும் குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்