வீரகட்டிய- அத்தனயால பகுதியில் பொலிஸாருக்கும் மக்கள் குழுவினருக்கும் இடையில் மோதல்

வீரகட்டிய, அத்தனயால பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 08 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் அப்பகுதியில் வீதியில் சென்றவர்கள் மீது சந்தேகமடைந்து அவர்களைச் சோதனையிட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் மோதலாக மாறியது.

குறித்த சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதகாவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.