கொரோனா பெருந்தொற்று: ஒரு இலட்சத்தை நெருங்கும் மனிதப் பேரழிவு!

உலக நாடுகளை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 15 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை, 15 இலட்சத்து 18 ஆயிரத்து 773 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரணப் பதிவுகள் 88 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.

உலகின் அநேகமாக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டு மக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையிலும் ஏற்கனவே பரவலை ஆரம்பித்திருந்த வைரஸின் வீரியம் இன்னும் குறையாமல் அதிகரித்துச் செல்கின்றது.

இந்நிலையில் நேற்று பிரித்தானியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன் அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 2 ஆயிரத்தை எட்டியுள்ளன.

இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நேற்று ஒரேநாளில் மாத்திரம் 6 ஆயிரத்து 414 பேர் மரணித்துள்ளனர் என்பதோடு உலகளவில் மொத்தமாக 3 இலட்சத்து 30 ஆயிரத்து 589பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வல்லரசு நாடுகளின் முதன்மையானதாக தன்னை முன்னிறுத்தும் அமெரிக்கா, கட்டுக்கடங்காது பரவும் கொரோனா தொற்றுநோயால் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 940 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணம் 14 ஆயிரத்து 788 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் நேற்றும் 31 ஆயிரத்து 935 புதிய வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 34 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, இங்கிலாந்தில் ஒரேநாளில் 938 பேரும் மரணித்துள்ளமை பதிவாகியுள்ள நிலையில் நேற்றைய தினமே அங்கு அதிக பட்ச உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மொத்தமாக பிரித்தானியாவில் 7 ஆயிரத்து 97 பேர் மரணித்துள்ள நிலையில் 60ஆயிரத்து 733 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அந்நாட்டில் குணமடைந்து வெளியேறியோர் 135 பேர் மாத்திரமே என்ற நிலையில் புதிய நோயாளர்கள் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 491 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்பெயினிலும் நேற்று ஒரேநாளில் 747 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு தீவிர நிலையில் பரவியுள்ள வைரஸால் இதுவரை ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மொத்த உயிரிழப்பு 14 ஆயிரத்து 792 ஆகப் பதிவாகியுள்ளதுடள் நேற்று மட்டும் 6 ஆயிரத்து 278 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு 48 ஆயிரத்து21 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதனிடையே, மற்றொரு ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கிய நாடாக உள்ளதுடன் மிகப்பெரும் மனித அழிவாக அங்கு மொத்தமாக 17 ஆயிரத்து 669 பேர் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.

அங்கு நேற்று ஒரேநாளில் 542 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த வைரஸ் தொற்றாளர்கள் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 422 பேராக உள்ளமை பதிவாகியுள்ளது.

இதனைவிட, பிரான்ஸிலும் அதிக உயிரிழப்புக்களை அண்மைய நாட்களில் வைரஸ் தொற்று ஏற்படுத்திவருகின்ற நிலையில் நேற்று மட்டும் அங்கு 541 பேர் மரணித்துள்ளனர்.

மேலும், மொத்த மரணம் 10 ஆயிரத்தைக் கடந்து 10 ஆயிரத்து 869 ஆகப் பதிவாகியுள்ள நிலையில் மொத்த வைரஸ் தொற்றாளர்கள் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 950 பேராகப் பதிவாகியுள்ளது.

இதனைவிட ஜேர்மனியிலும் நேற்று மட்டும் 333 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த மரணம் 2 ஆயிரத்து 349 ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் அங்கு ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 296 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை நேற்று மட்டும் 5 ஆயிரத்து 633 புதிய வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், ஜேர்மனியில் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியோறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் இதுவரை 46 ஆயிரத்து 300 பேர் குணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இதேவேளை, பெல்ஜியத்தில் நேற்று 205 பேர் மரணித்துள்ள நிலையில் அங்கு மொத்த மரணம் 2 ஆயிரத்து 240 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், 23 ஆயிரத்து 403 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, நேற்று 1 ஆயிரத்து 209 பேர் புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனைவிட ஈரானில் நேற்று 121 பேர் மரணித்துள்ளதுடள் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 993 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு 64 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 29 ஆயிரத்து 812 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, நெதர்லாந்தில் நேற்று 134 பேரிர் உயிரிழப்பு பதிவாகி அங்கு மொத்த மரணம் 2 ஆயிரத்து 248 ஆகப் பதிவாகியுள்ளது. அங்கும் வைரஸ் தொற்று வேகமாகப் பரவுகின்ற நிலையில், இதுவரை 20 ஆயிரத்து 549 வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட, பிரேஸிலில் நேற்று 134 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணம் 820ஆகப் பதிவாகியுள்ளது. துருக்கியில் நேற்று மட்டும் 87 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுவிற்சர்லாந்தில் 74 பேரும், கனடாவில் 46 பேரும், போர்த்துக்கல்லில் 35 பேரும், ஆஸ்ரியாவில் 30 பேரும் நேற்று மரணித்துள்ளனர்.

அத்துடன், சுவீடனில் நேற்று 96 உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன், அயர்லாந்தில் 25 பேரும், பொலந்தில் 30 பேரும், ஈக்குவடோரில் 22 பேரம் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஆசிய நாடான இந்தோனேஷியாவில் நேற்று 19 உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன் இந்தியாவில் 18 பேர் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கிய சிங்கப்பூர், தாய்லாந்து, கட்டார், சவுதி அரேபியா, டுபாயை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகம், தென் ஆப்பிரிக்கா, சிலி, கொலம்பியா போன்ற நாடுகளில், புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அந்த தொற்றுநோய் முழு அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா பாதிப்பால் கொத்துக் கொத்தாக மரணங்களை எதிர்கொண்ட வுஹான் நகரம், அதிலிருந்து விடுபட்டு, தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் அங்கு 76 நாட்களுக்குப் பின்னர் முதன்முறையாக விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.