உடம்பு முழுக்க சூடு கட்டி,விரட்டியடிக்க இந்த 6 பொருளை யூஸ் பண்ணுங்க,

ஏற்கனவே உடம்பு சூடு அதிகமா இருக்கு. இதில் வெயில் வேறு பாடாய் படுத்துதே.. இப்படியான புலம்பல்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்துதான் வருகிறது. வெயில் கொடுமை ஒருபக்கம் என்றால் வியர்வை பிரச்சனை அதற்கு மேல் இருக்கும். வியர்வையால் வரும் வேனில் பிரச்சனை சருமத்தை சற்று கூடுதலாக பதம் பார்த்துவிடுகிறது. ஏற்கனவே உடல் சூடு பிரச்சனை இருப்பவர்களுக்கு கோடையில் கூடுதலாக பாதிப்பு உண்டாகும். வெயிலின் கொடுமையிலிருந்து சமாளிக்க உணவு விஷயங்களி ல் கவனமும், உடலுக்கு நீர்ச்சத்தும் குறையாமல் பார்த்துகொள்வதும், உடலை சுகாதாரமாக வைத்து கொள்வதும் கூட அவசியமானது. இல்லையெனில் வியர்க்குருக்கள் உஷ்ணக்கட்டிகளாக மாறி முகத்தின் அழகை கெடுக்கும். முகம் மட்டுமல்லாமல் உடல் முழுக்க வரக்கூடிய விரட்டியடிக்க என்ன செய்ய வேண்டும் பார்க்கலாமா?

​டீ ட்ரீ ஆயில்

samayam tamil

அழகுக்கு பயன்படுத்தப்படும் தேயிலை மர எண்ணெய் இது. சரும பிரச்சனைகள் வராமல் இருக்க தாவர எண்ணெய்கள் உதவும். கட்டிகள் முகம், அக்குள், கழுத்து, இடுப்பு, முதுகு. தோள்பட்டை என்று எங்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த இடங்களில் மட்டும் டீ ட்ரீ ஆயிலை நனைத்த சுத்தமான பஞ்சை கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால் கட்டி சிவக்காது எரிச்சல் தராது. குறைய தொடங்கும். முடிந்தால் எண்ணெயை இலேசாக சூடு படுத்தியும் கொடுக்கலாம். தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் 4 அல்லது 5 முறை வரை கட்டிகள் மீது இந்த எண்ணெய் தடவி வந்தால் ஒரு வாரத்தில் கட்டிகள் வளராமல் குறைவதை பார்க்கமுடியும்.

​மஞ்சள் தூள்

samayam tamil

சேற்று புண் முதல் உடலில் எங்கு புண், கட்டி வந்தாலும் முன்னோர்கள் பயன்படுத்திய பொருள் மஞ்சள் தூள் தான். அதிக அளவு காயத்தால் சீழ் உண்டாகும் அளவுக்கு புண் இருந்தாலும் கூட விரைவாக ஆறுவதற்கு உதவுவது மஞ்சள் தான்.

மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படும். மஞ்சளை சுத்தமான நீரில் குழைத்து கட்டிகள் இருக்கும் இடங்களில் தடவி வரலாம். கட்டியில் எரிச்சல் இருந்தால் கற்றாழை சாறை கலந்து குழைத்து கட்டி இருக்கும் இடங்களில் தடவி வரவும். தொடர்ந்து 5 நாட்கள் வரை மஞ்சளை குழைத்து போட்டால் கட்டி பழுத்து உடையக்கூடும். கட்டிகள் உடைந்த பிறகும் அந்த இடத்தில் புண், வடுவோ இருக்காது. பயன்படுத்துவதற்கு முன்பு மஞ்சள் தூள் தரமானதா என்பதை மட்டும் கவனித்தால் போதும்.

​விளக்கெண்ணெய்

samayam tamil

உஷ்ணக்கட்டிகளாக இருந்தால் விளக்கெண்ணெய் உடனடி தீர்வாகவே இருக்கும். உடல் சூடு இருப்பவர்கள் கோடை காலங்களில் பெருவிரலில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைத்துகொள்வார்கள். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். குறிப்பாக வெயில் காலங்களில்.

இரவு நேரங்களில் விளக்கெண்ணெயை விரலால் தொட்டு இலேசாக மசாஜ் செய்து வந்தால் கட்டிகள் வறண்ட தன்மை மாறும். மிருதுவாகி கட்டிகள் மறையக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இயற்கை வைத்தியம் இது. இவை பக்கவிளைவையும் உண்டாக்காது என்பதால் உடலில் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும் விளக்கெண்ணெய் தடவலாம்.

​கல் உப்பு ஒத்தடம்

samayam tamil

இரவு படுக்கும் முன்பு வெந்நீரை கொதிக்க வைத்து கல் உப்பு கலந்து அதை கட்டிகள் மீது ஒத்தடம் கொடுத்தால் இதமாக இருக்கும். முன்னோர்கள் கல் உப்பை இரும்பு வாணலியில் வறுத்து அதை மெல்லிய வெள்ளை துணியில் முடிச்சு போட்டு கட்டிகள் மீது வைத்து ஒத்தடம் கொடுப்பார்கள். சற்றே சூடு கொண்ட இதை தாங்க முடியாதவர்கள் கல் உப்பு கலந்த நீரை ஹாட் வாட்டர் பேக்-ல் ஊற்றி கட்டிகள் மீது வைத்து ஒற்றி எடுக்கலாம். இதனால் கட்டிகளில் ஊறல் இருந்தாலும் நமைச்சல் இருந்தாலும் அரிப்புகள் இருந்தாலும் அடங்கும்.

​வேப்பிலை விழுது

வெயில் காலத்தில் அம்மை கண்ட வீட்டில் வேப்பிலை தான் மருந்தாகவே இருக்கும். அம்மை கட்டிகள் சிறிய அளவே இருந்தாலும் அவை அரிப்பையும் நமைச்சலையும் உண்டாக்ககூடியவை. தாங்கமுடியாமல் சொரிந்துவிட்டால் அவை மேலும் பரவி பாதிப்பை அதிகரிக்கும். குறிப்பாக குழந்தைகளால் இந்த அரிப்பை தாங்கவே முடியாது. அதற்கு ஒப்பான கட்டிகள் தான் இந்த சூடு கட்டி. கட்டிகள் பெரிதாக வளர்ந்துவிட்டால் அதை தொட்டாலோ கிள்ளினாலோ கூட பன்மடங்கு பெருகிவிடும் அபாயம் உண்டு. இந்த அரிப்பை போக்க வேப்பிலை மட்டும் தான் தீர்வாக இருக்கும். வேப்பிலையை அரைத்து அந்த விழுதுடன் சிட்டிகை மஞ்சள் சேர்த்து குளிக்கும் முன்பு பற்றுபோட்டால் கட்டிகள் அதிசயமாய் மறையத்தொடங்கும்.

​குளிர்ச்சி பொருள்

samayam tamil

கட்டிகள் மீது வெயில் படும் போது அதன் வீரியம் அதிகமாகும். அவ்வபோது அதன் மீது குளிர்ச்சியான பொருள் பட பட கட்டிகள் பெரிதாகமால் தடுக்கமுடியும். வெளியில் செல்லும் போது சுத்தமான நீரில் முகத்தை கழுவலாம். முகம் தாண்டி தோள்பட்டை, அக்குள் , இடுப்பு, முதுகு பகுதியில் இருந்தால் வீட்டில் இருக்கும் போது வெள்ளரிக்காயை அரைத்து உடல் முழுக்க பூசலாம். நுங்கு வாங்கி அதன் நீரை சேகரித்து கட்டிகள் மீது தடவலாம் உடனடியாக குளிர்ச்சியாக இருக்கும். பன்னீர் கலந்த நீரால் உடலை கழுவலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்த கூடாது. குளிக்கும் போதும் சோப்பு அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவையெல்லாம் செய்தும் கட்டிகள் அதிகப்படியாக பெருகி கொண்டே இருந்தால் சரும பராமரிப்பு மருத்துவரை நாடலாம். எல்லாமே இயற்கை பொருள் பக்கவிளைவில்லாத பொருள் என்பதால் இவையே போதுமானதாக இருக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.