எங்கடா நம்ம சங்கத்து தலைவர காணும்.. நிதி என்றதும் நதிபோல் காணாமல் போன விஷால்

கொரானா பிரச்சனையால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சினிமாவே தொழில் என நம்பி பல தினக்கூலி தொழிலாளர்கள் வேலை செய்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பெப்சி யூனியன் சார்பில் வேலையில்லாமல் தவிக்கும் சினிமா கலைஞர்களுக்கு முன்னணி நடிகர்களின் பணம் உதவி சார்பில் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தற்போது ஆல் அட்ரஸ் இல்லாமல் ஓடி ஒளிந்து விட்டாராம்.

சினிமாவில் என்னவெல்லாம் செய்து ஏமாற்றுகிறார்களா அதே வேலையைச் செய்து நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார். அதன் பிறகு பலரும் விஷால் மீது பண மோசடி செய்துவிட்டார் என குற்றம்சாட்டி வந்தனர். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் சமீபகாலமாக இழந்து விட்டாராம் விஷால்.

மேலும் துப்பறிவாளன் 2 படம் காரணமாக மிஷ்கினிடம் அவதூறாக பேசியதாக அவர் மேடை போட்டு கூறினார். இதனால் மொத்த மானமும் போன விஷால் தற்போது வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு ஆகிவிட்டாராம். நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்த பிறகு நலிந்த கலைஞர்களுக்கு மாதாமாதம் ஒரு உதவி தொகை கொடுக்கப்படும் என பல திட்டங்களை கூறினார் விஷால்.

ஆனால் அதில் ஒன்று கூட உருப்படியாக நடக்கவில்லை. தற்போது சினிமா தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் சோற்றுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பலர் பண உதவி செய்து வருகின்றனர். ஆனால் சினிமாவின் இரு வெவ்வேறு துறைகளில் தலைவராக இருக்கும் விஷால் தற்போது வரை ஒத்த பைசா கூட தராதது பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் ஏழு பொண்டாட்டி கேக்குதாம் என்ற பழமொழியை விஷாலை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள் கோலிவுட் வாசிகள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.