தினமும் ஒருத்தன் செத்துட்டு இருக்கான் இது ரொம்ப முக்கியமா.. உங்க தளபதிட்ட இத முதல்ல கேளுங்க.. நித்தி அதிரடி

கொரோனாவின் தாக்கத்தினால் தமிழ் சினிமா அகல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது, கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். படம் எடுப்பதற்கு கடன் வாங்கியுள்ள தயாரிப்பாளர்களின் நிலைமையை கேட்டாலே அடுத்த மூன்று மாதத்திற்கு பெரும் வேதனை காலம் தான். ஏனென்றால் வட்டிக்கு மேல் வட்டி குட்டி போட்டு வாட்டி வதைத்து விடும்.

இது ஒருபுறமிருக்க நேற்றைய தினம் மாஸ்டர் படம் வெளிவந்து இருக்க வேண்டும் தொடர்ந்து 5 நாள் விடுமுறையை டார்கெட் செய்தனர் படக்குழுவினர். ஆனால்,மாஸ்டர் படத்தை வெளியிட முடியவில்லை.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஆதரவாக XB பிலிம் கிரியேட்டர்ஸ் ட்விட்டரில் “நீங்கள் எங்களை எப்படி மிஸ் பன்னுரிங்கலோ நாங்களும் உங்களை மிஸ் பண்றோம்! ஏதாவது ஒரு மாஸ்டர் கொரோனாவுக்கு மருந்தைக் கண்டுபிடித்து முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்! நாங்கள் வலுவாக திரும்ப வருவோம் நண்பா. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.” என்று பதிவிட்டுள்ளனார்.

ரசிகர்கள் ஒருபுறம் #MasterFDFS என்ற ஹாஷ்டாக்கை இந்திய அளவில் டிரெண்டாகி விட்டனர். இப்படி நேற்றைய தினம் மாறி மாறி ஆறுதலை தெரிவித்துக் கொண்டனர். இப்படி போய்க் கொண்டிருந்த சூழ்நிலையில் அரசியல் பதிவுகளை அவ்வப்போது கலாய்த்து வந்த நித்தியானந்தா.

தமிழ் சினிமாவை கலாய்க்க ஆரம்பித்து விட்டார், விஜய் ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக மக்கள் கஷ்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் “கை தட்டக்கூடாது விளக்கேற்றக்கூடாது ஆனா டிரைலர் மட்டும் வேணுமா.? கொஞ்சமா காசு கொடுக்க சொல்லுங்க தங்கத்தமிழன் கிட்ட” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே மாஸ்டர் படம் வெளிவரவில்லை என்ற ஆதங்கத்தில் உள்ள ரசிகர்கள், தற்போது இவர் பதிவை பார்த்து திட்டி தீர்த்து தங்களது கோபத்தை இணையதளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தளபதி விஜய் ஏதோ ஒரு காரணத்திற்காக மறைமுகமாக செய்துவரும் உதவிகளை வெளிக்கொண்டு வருவதில்லை. மக்களுக்கு எது எப்போது தேவையோ அதை கண்டிப்பாக செய்வார் என்று ரசிகர்கள் நம்பி இருக்கின்றனர். மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.

மேலும் சிறு படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பிறகுதான் பெரிய படங்கள் வெளிவர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் கண்டிப்பாக மாஸ்டர், சூரரைப்போற்று, ஜகமே தந்திரம் போன்ற மாஸ் பட்ஜெட் படங்கள் 3 முதல் 4 மாதங்கள் தள்ளிப் போவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.