குதிகால் வலி: ஒரு அடி எடுத்து வைக்க முடியலயா, உடனே சரியாக இதை செய்யுங்க..

காலை அடுத்த அடி எடுத்து வைக்க முடியல என்று சொல்லும் முன்னோர்கள் அடுத்த இரண்டு நாட்களில் வேகமாக நான்கு எட்டு வைப்பார்கள். ஆனால் இப்போது பலருக்கும் முதலில் கணுக்காலில் படரும் வலி படிப்படியாக மூட்டு வரை பரவி தீரா நோயாக மாறிவிடுகிறது. இதனால் காலையில் எழும் போது நடக்கவே முடியாமல் சிரமத்துக்கு உள்ளாவார்கள். பிறகு படிப்படியாக குதிகால் வலி குறைய தொடங்கும். பிறகு இரவு நேரங்களில் வலி ஆரம்பிக்கும். இதனால் நடக்கும் போது பாதத்தை கீழே வைக்காமல் விரல்களை அழுத்தியபடி நடப்பதுமுண்டு. ஆனால் குதிகால் வலி சரிசெய்யகூடிய பிரச்சனைதான். ஏன் கணுக்கால் வலி உண்டாகிறது கைவைத்திய முறையில் எப்படி இதை சரிசெய்வது என்று தெரிந்துகொள்வோம்.

​கணுக்கால் வலி

samayam tamil

அதிகமான உடல் எடை இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும் என்று சொல்வது உண்மை கிடையாது நாம் நடப்பது முதல் நின்றிருக்கும் முறை, உட்கார்ந்திருக்கும் நேரம் அதன் தன்மை கூட இதற்கு காரணமாக இருக்கலாம். சித்தமருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர் கோர்வையுடன் தொடர்பு கொண்டது என்கிறது.

உடலில் சமநிலையில் இருக்கவேண்டிய வாதம், பித்தம், கபம் மூன்றில் ஒன்று அதிகம் ஆனாலும் அவை தலையில் நீர்கோர்வை பிரச்சனையை உண்டு செய்கிறது. பிறகு தலையிலிருந்து கழுத்து பகுதியாக வெளியேறி கணுக்காலை அடைந்து அங்கு தேங்கி வலியை உண்டாக்கிவிடுகிறது. இவை பித்தநீராக கெட்டியாகி வலியை கூடுதலாக்குகிறது.

​வலி தீவிரமாகும்

samayam tamil

ஆரம்பத்தில் காலை தூங்கி எழுந்ததும் இந்த வலியை உணர்வார்கள். பிறகு நடக்கும் போது இலேசாக வலிக்க தொடங்கும் பிறகு படிப்படியாக வலி உணர்வு அதிகரிக்கும். சிலருக்கு கணுக்காலில் வீக்கமும் உண்டாகிறது. அதோடு குதிகால் வெடிப்பும் ஏற்படும்.

கால்களை தரையில் ஊன்றாமல் நடக்கும் போது நரம்புகள் சுருட்டி கொள்ளவும் தசை நார்கள் பாதிப்படையவும் செய்யும்.எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை செய்யலாம். என்ன செய்தால் கணுக்கால் குதிகால் வலியும் வீக்கமும் கட்டுப்படும் என்று பார்க்கலாம்.

​வடித்த சாதம் அல்லது வெந்நீர்

samayam tamil

சாதம் வடித்த கஞ்சியை சூடு பொறுக்க இருக்கும் போது அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் குதிகாலை ஊன்றி வைக்க வேண்டும். சூடு பொறுக்க தாங்கும் சூட்டில் இருந்தால் வலிக்கு இதமாக இருக்கும். சூடு ஆறிய பிறகு மீண்டும் சூடுபடுத்தி வைக்கலாம். தினமும் 15 நிமிடங்கள் வரை இதை செய்ய வேண்டும்.

இரவு நேரங்களில் படுப்பதற்கு முன்பு வெந்நீரை சூடு பொறுக்கும் அளவு வைத்து அதில் குதிகாலை நனைக்கலாம். இப்படி காலை மாலை இரண்டு வேளையும் காலை வெந்நீரில் நனைத்து வந்தால் கணுக்கால் வலி குறையும். குளிக்கும் போதும் மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரை கணுக்கால் மீது ஊற்றி வரலாம்.

​ஒத்தடம் தரலாம்

samayam tamil

தீவனம் விற்கும் கடைகளில் உமி கிடைக்கும். இதை வாங்கி ஒரு கைப்பிடி அளவு எடுத்து வாணலியில் வறுத்து சற்று கனமான துணியில் போட்டு மூட்டையாக கட்டி கொள்ளவும்.

இதை மெதுவாக பாதத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். கணுக்கால் சூடு இருக்கும் வரை வைத்து அழுத்தி ஒத்தடம் கொடுக்கலாம்.உமி இல்லாதவர்கள் கல் உப்பை வாணலியில் வறுத்து அதை ஒத்தடமாக்கி கொடுக்கலாம். கணுக்கால் வலிக்கு இதமாக இருக்கும். வலி படிப்படியாக குறையும். பாதத்தில் வீக்கம் இருந்தாலும் வீக்கம் வற்ற தொடங்கும். இரண்டு நாட்களில் கணுக்கால் வலி குறைவை உணர்வீர்கள்.

​செங்கல் சிகிச்சை

samayam tamil

செங்கல்லை பாதியாக எடுத்து அடுப்பின் மீது வையுங்கள். சிலிண்டர் பயன்படுத்துபவர்களும் அடுப்பின் மீது செங்கல்லை வைத்து சற்று சூடேறியது எடுத்து கீழே வையுங்கள். எருக்கம் இலையை சூடேறிய செங்கல்லின் மீது வைத்து அதன் மீது குதிகால் பகுதியை சற்று அழுத்தி வையுங்கள். கல்லில் சூடு அதிகமாக இருக்கும் என்பதால் பொறுக்கும் சூடு வரும் வரை காத்திருந்து வையுங்கள்.

 

காலை செங்கல் மீது ஒற்றி ஒற்றி எடுக்கும் போது குதிகாலில் இருக்கும் நீரை எருக்கம் இலை உறிஞ்சு கொள்ளும். எருக்கம் இலை இல்லாதவர்கள் வெற்றிலையை பயன்படுத்தலாம். உடனடியாக குதிகால் வலியிலிருந்து மீண்டு வருவீர்கள்.

தவிருங்கள்

samayam tamil

குளிர்ச்சியான தரையில் பாதத்தை நீண்ட நேரம் ஊன்றி வைக்காதீர்கள். தினமும் இரவு வெந்நீர் ஒத்தடமாவது கொடுங்கள். உயரம் அதிகமான காலணிகளை அணிய வேண்டாம். குதிகால் வலியை உணர்ந்தாலும் தரையில் கால் பதித்து நடமாடுங்கள்.ஒரே இடத்தில் உட்காராமல் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஐந்து நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். நாற்காலியில் அமரும் போது கால்களை நேராகவும் பாதங்களை தரையில் அழுத்தியும் உட்கார்வதன் மூலம் குதிகால் வலி குறையும்.

எளிமையான சிகிச்சைகளை வீட்டிலேயே கடைபிடிப்பதன் மூலம் குதிகால் கணுக்கால் வலி பிரச்சனையிலிருந்து வேகமாகவே முன்னேறலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.