பண விஷயத்தில் புதுசா முளைத்த பிரச்சனை.. முருகதாஸால் ரஜினிக்கு வந்த சங்கடம்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சுமார் 40 வருடமாக நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் 100 கோடி சம்பளம் மற்றும் 18 கோடி வரி என மொத்தம் 118 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தர்பார் படம் அதிக விலை குடுத்து வாங்கியதால் சில இடங்களில் மட்டும் வசூல் வரவில்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். மேலும் நஷ்ட ஈடு கேட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முருகதாஸ் ஆகியோர்களின் வீடுகளை நோக்கி படையெடுத்தனர்.
இதனால் தற்போது ரஜினிகாந்தை வைத்து தலைவர் 168 படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆட்டம் கண்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமும் தலைவர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட அதே அளவு சம்பளத்தை தான் பேசியுள்ளார் என்பது சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் வெளியிட்ட செய்தி. தற்போது படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் ரஜினிகாந்திடம் 50 கோடி அட்வான்ஸ் முன்பணமாக கொடுத்துள்ளார்.
மீதி 50 கோடி சம்பளத்தை படம் வெளிவந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது. மேலும் ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதற்கு காரணம் எந்திரன் படம் கைவிடும் சூழ்நிலையில் அந்தப் படத்திற்கு உதவி செய்தவர் கலாநிதி மாறன்தான். ரஜினியும் தற்போது தன்னுடைய மார்க்கெட் நிலவரத்தை அறிந்து விட்டுக் கொடுத்ததாகவும் தெரிகிறது.
இது எந்த அளவு உண்மை என்பதை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தான் தெரிவிக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக ரஜினியின் படத்தை இனி விநியோகஸ்தர்கள் அதிக பணம் கொடுத்து வாங்குவது கஷ்டம் என்பது மட்டும் உறுதியான தகவலாக தெரிகிறது.
கருத்துக்களேதுமில்லை