மாஸ்டர் முதல் நாள் வசூலை கணித்த விநியோகஸ்தர்கள்.. இது நடந்தால் தளபதி வேற லெவல் போறது உறுதி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய்தான் வசூல் மன்னன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனை பல தயாரிப்பாளர்களும் பட வினியோகஸ்தர்களும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. சமீப காலமாக விஜய் நடிப்பில் வந்த சுமாரான படம் பிகில் என்று கூட சொல்லலாம். இருந்தாலும் வசூல் வேட்டை ஆடியது.

தற்போது அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் வெளியீடு பற்றி தான். எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என்ற பழமொழிக்கு ஏற்ப எங்கிருந்தோ கொரானா வந்து உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது.

இந்நிலையில் மக்களின் யதார்த்த வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சினிமா வர்த்தகத்தில் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஆகி உள்ளது. இதனால் விஜய் நடிப்பில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் படம் தள்ளிச் சென்று விட்டது.

தற்போது வரை மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்ய முடியவில்லை. இருந்தாலும் மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் முதல் நாள் வசூல் சுமார் 40 கோடி வரை சர்வ சாதாரணமாக இருக்கும் என திருச்சியைச் சேர்ந்த பிரபல விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளது தமிழ் சினிமாவை பிரமிக்க வைத்துள்ளது.

ஒரு படம் வெளியாவதற்கு முன்னரே அதன் வசூலை கணிப்பது இதுவே முதல் முறையாகும். பொருத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.