அப்புறம் நம்ம தனுஷ் ஸ்ருதிஹாசன் லவ் எப்படி போகுது? முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மோளமடிக்கும் நெட்டிசன்கள்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் நமது நெட்டிசன்கள் தேவையில்லாமல் பழைய விஷயங்களை கிளறி நடிகர் நடிகைகளை சங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றன.

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான திரைப்படம் 3. படம் படு தோல்வியை சந்தித்தாலும் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. அதிலும் அனிருத் இசையமைப்பில் தனுஷ் எழுதிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் எங்கும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என அப்போதே கொளுத்தி போட்டார்கள் நம் கோலிவுட் வாசிகள். இது போதாதா நம்ம நெட்டிசன்களுக்கு.

இருவரையும் வைத்து கிழி கிழி என்று கிழித்து விட்டனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஸ்ருதிஹாசன் நேரடியாகவே இந்த வதந்திக்கு பதில் அளித்தார். ஸ்ருதிஹாசன் கூறியதாவது, தனுஷ் சினிமாவில் தனக்கு கிடைத்த நல்ல நண்பர் எனவும், நம்பிக்கைக்குரியவர் எனவும் புகழ்ந்து தள்ளினார்.

மேலும் இருவருக்கும் இடையில் நல்ல நட்பை தவிர வேறு எந்த தொடர்பும் கிடையாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஒரு மனைவியே கணவனை இவ்வளவு ரொமான்டிக்காக இன்னொரு பெண்ணுடன் சேர்த்து வைத்து எடுக்க வேண்டிய தேவை இருக்கிறதா என பல கேள்விகள் ஐஸ்வர்யாவை சுற்றின.

அப்போது இது ஒரு பெரிய பூதாகரமாக வெடித்து ஒருவழியாக அடங்கியது. தற்போது பழைய விஷயங்களை திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கும் நெட்டிசன்கள் போகிற போக்கில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனை ஒரு காட்டுக் காட்டிவிட்டு சென்றுவிட்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.