அஜித்தை வைத்து பிரம்மாண்ட பிளான் போட்ட கவுதம் மேனன்.. பழம் நழுவி கைல விழாம கீழ விழுந்துடுச்சாம்

தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ள நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தல அஜித். பல கோடிகளில் வியாபாரம் செய்யும் அளவுக்கு ரசிகர்களை கொண்ட அஜீத்தை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பு நிறுவனங்களும் பிரபல இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொள்கின்றன.

தல அஜீத்தும் சில காலங்களுக்கு முன்பு தொடர் தோல்வி படங்களை கொடுத்தவர் தான். இருந்தாலும் விடா முயற்சியால் தற்போது வெற்றியை சுவைத்து வருகிறார். தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெறிகொண்டு களமிறங்க இருக்கும் திரைப்படம் வலிமை.

கொரானா பாதிப்பால் தற்போது ஒட்டுமொத்த சினிமா உலகின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தீபாவளிக்கு வலிமை படம் வெளியாகுமா என்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிலவி வருகின்றன.

அதேபோல் தல அஜித்துக்கு சரியான நேரத்தில் என்னை அறிந்தால் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் தான் கவுதம் மேனன். முதன்முதலாக அஜித்துடன் கைகோர்த்த கௌதம் மேனன் அதன்பிறகு ஸ்டார் டைரக்டர் ஆகிவிட்டார் என்று கூட சொல்லலாம்.

ஆனால் அதற்கு முன்பாகவே ஒரு பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருந்த படத்தில் அஜித்துடன் இணைய இருந்தாராம் கௌதம் மேனன். துப்பறியும் ஆனந்த் என்ற படத்தின் தலைப்பை வைத்து கதையை தொடங்கினாராம்.

ஆனால் அப்போது தல அஜித் அசல் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த படத்தை கைவிட்டு விட்டார்களாம். அப்போதே ஹாலிவுட் தரத்தில் உருவாக்க வேண்டும் என நினைத்த கௌதம் மேனனுக்கு அஜித் தான் சரியாக இருப்பார் என அந்த கதையை வைத்துக்கொண்டு நீண்ட நாட்கள் காத்திருந்தாராம்.

அசல் படத்திற்கு கால்சீட் கொடுத்து விட்டதால் கௌதம் மேனன் அஜித்துடன் இணைய வாய்ப்பு கிடைக்கவில்லை. அசல் படம் தல அஜித்தின் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத தோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.