நெருக்கமான காட்சியில் நடிக்கும்போது தவறாக நடந்த நடிகர்.. ரஷ்மிகாவுக்காக கொந்தளித்த மற்றொரு ஹீரோ

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான ரஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்மிகாவின் சொந்த மாநிலமான கன்னட மொழி படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல கன்னட ஹீரோ துரு சர்ஜா நடிப்பில் உருவாகி ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாக இருந்த திரைப்படம் போகரு.

ஆனால் கொரோனா தாக்கத்தினால் படத்தின் வெளியீடு தள்ளிக் சென்றது. இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்த போகரு படத்திலிருந்து கராபு எனும் பாடல் வெளியிடப்பட்டது.

இதில் கேங்ஸ்டராக நடிக்கும் துரு சர்ஜா ஹீரோயினை காதலிக்க மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் வீடியோபாடல் வெளியாகியது. அதில் பெண்களை மோசமான வார்த்தைகளில் பேசுவது போன்ற பாடல் அது.

மேலும் காதலிக்கவில்லை என்றால் நாக்கை வெட்டுவேன், முடியை கட் பண்ணுவேன் என ஏக வசனங்கள் இடம் பெற்று இருந்தன. இதனை மற்றொரு நடிகர் ஒருவர் ரஷ்மிகாவை மட்டுமல்லாமல் மொத்த பெண்களையும் கேவலப்படுத்துவது போல் உள்ளது என பெரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.