காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.. அஜித்தால் நொந்து நூடுல்ஸ் ஆன விஷ்ணுவர்த்தன்

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என ஒரு படத்தில் காமெடி காட்சி வரும். அதேபோல் விஷ்ணுவரதன், படம் இயக்கினால் அஜித்தை வைத்து மட்டும் தான் படம் எடுப்பேன் என நீண்ட காலமாக தவமிருந்து வந்தார்.

விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் பல ட்ரெண்ட் செட் படங்களை கொடுத்தவர். அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஹாலிவுட் ஸ்டைலில் படம் இயக்குவதில் கில்லாடி.

நீண்ட காலமாக வெற்றிக்கு தடுமாறிக் கொண்டிருந்த தல அஜித்க்கு பில்லா படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி ஏற்படுத்திக் கொடுத்தார் என்றால் மிகையாகாது. ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த பில்லா படத்தின் அதே கதையை வைத்து எப்படி வெற்றியை சாத்தியமாக்க முடியும் எனபேசியவர்களுக்கு தனது மேக்கிங் ஸ்டைல் மூலம் நிரூபித்துக் காட்டியவர் விஷ்ணுவர்தன்.

அதன் பிறகு சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் தல அஜித்துக்கு தீபாவளி பரிசாக ஆரம்பம் என்ற படத்தை அட்டகாசமாக கொடுத்திருந்தார். வசூலில் சக்கை போடு போட்ட இந்த படம் அஜித் ரசிகர்களின் பேவரைட் படமும் கூட. இந்நிலையில் மீண்டும் விஷ்ணுவர்தன் எப்போது அஜித்தை இயக்குவார் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தல அஜீத்துக்கு ஏற்கனவே சரித்திர கால கதை ஒன்றை கூறிவிட்டு அதற்காக பல நாட்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார் விஷ்ணுவர்தன். தல அஜித்துக்கு சரித்திர படங்களில் நடிக்க ஆர்வம் இருந்தாலும் தற்போது வெயிட் செய்ய வேண்டாமென ஹிந்தியில் படம் இயக்க சென்றுவிட்டார்.

அதற்கு தல அஜீத் போன் செய்து வாழ்த்து தெரிவித்ததாக அஜித்தின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்தன. மீண்டும் அஜித் விஷ்ணுவர்தன் காம்போவுக்கு வெறித்தனமான வெயிட்டிங் சார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.