அஜித்தை தாக்கி வச்ச வில்லத்தனமான வசனம்.. எரியிற நெருப்புல எண்ணைய ஊத்தாதிங்க என மறுத்த விஜய்

இப்போதைக்கு தமிழ் சினிமாவை தாங்கிப் பிடிக்கும் ஹீரோக்கள் என்றால் அது தளபதி விஜய் மற்றும் தல அஜித் மட்டும் தான். இவர்கள் இருவருக்கும் இருக்கும் ரசிகர் கூட்டம் அளவு கடந்தது.

இருவரும் ஒரே கால கட்டங்களில் தான் வளர்ந்து வர ஆரம்பித்தனர். அப்போதே இருவரது ரசிகர்களுக்கும் மோதல்கள் இருந்துகொண்டுதான் இருந்தது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் யார் நம்பர் ஒன் ஹீரோ என்ற சண்டை உருவாகியிருக்கிறது.

ரசிகர்களையும் தாண்டி பல இயக்குனர்களுக்கும் இந்த ரசிகர் போதை உண்டு. அதாவது அஜித்தை பிடித்த இயக்குனர்கள் விஜய்யை தாக்கி பேசுவதைப் போல வசனம் எழுதுவது, விஜய்யை பிடித்த இயக்குனர்கள் அஜித்தை எதிர்த்துப் பேசுவதை போல வசனமும் எழுதி வைத்து தங்களது படங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வார்கள்.

அதை சமீபத்தில் விஜய்யை பிடித்த இயக்குனர் ஒருவர் பேட்டி ஒன்றில் ஓபன் ஆக கூறியிருப்பது தமிழ் சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் தான் செல்வபாரதி.

பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கி விஜய்யை தாய்மார்களுக்கு பிடித்த நடிகராக மாற்றி விட்டார். 2002 ஆம் ஆண்டு தல அஜித்தின் வில்லன் படமும் தளபதி விஜய்யின் பகவதி படமும் ஒன்றாக வெளியானது. இதில் வில்லன் படம் வெற்றி பெற்றது.

இதனால் அஜித்தை தாக்குவதற்காக இயக்குனர் செல்வபாரதி வசீகரா படத்தில், ‘நீ பேரு வச்சா தான் வில்லன், நான் பேசிக்காவே வில்லன்’ என்ற வசனத்தை வைத்தாராம். ஆனால் தளபதி விஜய், அஜித்தை தாக்கிப் பேசும் வசனத்தை நான் பேச மாட்டேன் என மறுத்து விட்டதாக கூறியுள்ளார்.

சமீபத்தில்கூட அட்டகாசம் படத்தின் இயக்குனர் சரண், தளபதி விஜய்யை தாக்குவதற்காக தான், ‘உனக்கென்ன உனக்கென்ன’ பாடலை வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.