கனடா-அமெரிக்கா எல்லையை திறக்கும் காலம் மேலும் நீடிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கான கால எல்லையை மேலும் நீடிக்க முடிவெடுத்திருப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து எல்லையின் இருபுறமும் உள்ள மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு முடிவு என ட்ரூடோ நேற்று (சனிக்கிழமை)  தெரிவித்தார்.

கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லை கடந்த மார்ச் 21 ஆம் திகதி மூடப்பட்டது.

இதன்போது, கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அத்தியவசிய வர்த்தகம் மற்றும் அவசரகால பொது சுகாதார நோக்கங்களுக்காக பயணத்துக்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்