ஊரடங்குச் சட்டத்தால் உணவின்றித் தவிக்கும் நாளாந்த கூலிவேலை செய்யும் இலங்கைத் தமிழ்க் குடும்பங்களுக்கான உதவிகள்…

அவசரகால மற்றும் ஊரடங்குச் சட்டங்களால் முழுமையாகப் பாதிக்கப்பட்டு பசியால்  வாடும்  இலங்கைத் தமிழ் தினசரிக் கூலித்தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக எம்மால் முடிந்த

உதவிகளை செய்ய ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் கடமைப்பட்டுள்ளோம்.

அந்தவகையில் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் செய்யும் உதவித் திட்டங்களுக்கு எமது உறுப்பினர்கள் பலர் தமது பங்களிப்புகளை செய்துள்ளனர்.

தாமாகவே இதில் அக்கறை செலுத்தி தமது நண்பர்களிடமும் நிதி திரட்டி கொடுத்துள்ள இருவரை இங்கு குறிப்பிடவேண்டும்.

திரு து.இராமச்சந்திரன் $1300/= சேர்த்துத் தந்துள்ளார்.

திரு சுப்பிரமணியம் புவனேஸ்வரன் சிறு சிறு துளியாகச் சேர்த்து $ 560/= கொடுத்துள்ளார்.

இந்த இருவருக்கும் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

இதுவரை ஆறரை இலட்சம் ரூபா அனுப்பியுள்ளோம் என்பதையும் அனைவருக்கும் அறியத் தருகின்றேன்.

கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.