நடிகை நதியா வெளியிட்ட அவரது மகள் புகைப்படம்.. அம்மா யாரு மகள் யாரு என குழம்பி போன ரசிகர்கள்

நடிகை நதியா ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களான சிவகுமார், பிரபு, மோகன் என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தவர் இவர் நடித்த படங்களை பார்த்தவர்களுக்கு இவரை யாராலும் மறக்க முடியாது.

ஏனென்றால் அவ்வளவு அழகாக இருப்பார் தற்பொழுது வயது இவருக்கு 53 ஆகும் ஆனாலும் இன்னும் அவரது அழகு குறையாமல் காண முடிகிறது, இவர் இன்னும் அழகாக இருப்பது அனைத்து பெண்களுக்கும் பொறாமை தான்.

nathiya

இவர் 2004 ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு அம்மாவாக நடித்து அசத்தினார், இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் பட்டாளம் அதன் பிறகு தமிழில் நடிக்காமல் மலையாளம் தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தார்.

nathiya

இந்த நிலையில் தற்போது நதியா சின்னத்திரையில் நடித்து வருகிறார் ஆம் சன் டிவியில் மிக முக்கிய சீரியலான ரோஜா சீரியலில் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது இரண்டு மகள்களுடன் வெளிநாடுகளில் எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் அம்மா யாரு மகள் யார் என்று தெரியவில்லை அவ்வளவு அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்