இதை செஞ்சாதான் மாஸ்டர் ட்ரெய்லர் வருமாம்.. செய்தி கேட்டு கவலையில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டிரைலர் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்தன.

ஏப்ரல் 9ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படம் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் மாஸ்டர் படத்தின் வெளியீடு தள்ளிக் சென்றது.

இருந்தாலும் மாஸ்டர் படத்தின் டிரெய்லரையாவது வெளியிடலாமே என படக்குழுவினரிடம் தினமும் ரசிகர்கள் மன்றாடி வருகின்றனர். ஆனால் மாஸ்டர் படத்தின் டிரைலரை ரெடி பண்ணியும் வெளியிட முடியாத நிலைமையில் உள்ளார்களாம் படக்குழுவினர்.

மார்ச் 21 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்துமே மே 3ஆம் தேதி வரை இழுத்து மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாஸ்டர் படத்தின் ட்ரெய்லருக்கு CBFC சர்டிபிகேட் வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் ஏப்ரல் 14ஆம் தேதி மாஸ்டர் படத்தின் டிரைலரை வெளியிட முடியாமல் தடுமாறி விட்டார்களாம் படக்குழுவினர்.

அதுமட்டுமல்லாமல் மீண்டும் அலுவலகங்கள் பழையபடி திறக்கப்பட்டால் தான் மாஸ்டர் டிரைலருக்கு CBFC சான்றிதழ் கிடைக்கும் எனவும் அதன் பிறகுதான் டிரைலர் தேதியை உறுதி செய்ய முடியும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.