சீனாவுக்குப் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பும் நோக்கம்- ட்ரம்ப் அறிப்பு

கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மைகளை அறிவதற்காக சீனாவுக்குப் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பிவைக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவிய முறை, அதனால் பாதிக்கப்பட்டோர் தொகை, உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆகிய உண்மைத் தகவல்களைக் கூறாமல் சீனா மூடிமறைப்பதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது.

உண்மையை ஒளிவுமறைவின்றிச் சீனா தெரிவிக்க வேண்டும் என்றும், அது கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.

இதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையில் சீனாதான் முதலிடம் என்றும், அந்த எண்ணிக்கை அமெரிக்காவைவிட மிக அதிகம் என்றும் ட்ரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

துல்லியமான தகவல்களைத் தருமாறு தொடர்ந்து பலமுறை கேட்ட பின்னரும் சீனா மறுத்துவருவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் சீனாவுக்குப் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பிவைக்க விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலககையே பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உள்ள வைரலொஜி இன்ஸ்ரிரியூட் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து ஏற்பட்ட தவறினால் மனிதர்களுக்குப் பரவியுள்ளது என அமெரிக்க ஊடகம் குற்றஞ்சாட்டியது.

இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும், நடந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதுடன் அந்த ஆய்வுகூடத்துக்கு அளித்துவந்த நிதி உதவி நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள குறித்த ஆய்வுகூட நிர்வாகம் கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.