உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் – உலக உணவு திட்ட அமைப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 265 மில்லியனாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுலாத்துறை வருமான வீழ்ச்சி, கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் தொடர்புடைய பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் தாக்கம் இந்த ஆண்டு சுமார் 130 மில்லியன் மக்கள் கடுமையான பசியுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19 மில்லியன் கணக்கானவர்கள் ஏற்கனவே பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர் என உலக உணவு திட்டத்தின் ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் ஆரிஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்