இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று!

இரண்டு பூனைகளுக்கு முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள இரண்டு பூனைகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பூனைகளுக்கும் சிறியளவிலான அறிகுறிகளே தென்படுகின்றமையினால் அவற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பூனைகள் பராமரிக்கப்படும் வீட்டிலுள்ள எவருக்கும் கொரோனா தொற்று இல்லையெனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் நாய் ஒன்றுக்கும், சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.