அந்த மூன்று நாட்களில் பெண்களை கட்டுப்படுத்துவது எப்படி எனக் கேட்ட ரசிகர்.. கூச்சப்படாமல் பதிலளித்த இலியானா

தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் டாப் நடிகையாக வளர்ந்து தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை இலியானா. சமீபத்தில்தான் தனது வெளிநாட்டு காதலருடன் பிரேக் அப் செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

கொரானா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல நடிகர் நடிகைகளும் தாங்களாக முன்வந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

அப்படித்தான் நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் ரசிகர் ஒருவர் பெண்களின் மாதவிடாய் காலத்தை எப்படி அவர்களை சமாளிப்பது என கேள்வி கேட்டுள்ளார்.

கொஞ்சமும் கூச்சப்படாமல் தைரியமாக தனது பதிலைக் கூறிய இலியானாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இலியானா கூறியதாவது, மாதவிடாய் காலத்தில் அந்த மூன்று நாட்கள் பெண்கள் மிகவும் கோபத்துடன் இருப்பார்கள் என்றும், எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் மனப்பான்மையில் இருப்பார்கள் எனவும் கூறினார்.

மேலும் அவர்களை அந்த மூன்று தினங்களில் மிகவும் ஜாக்கிரதையாக அணுகவேண்டும் எனவும், பெண்கள் கோபப்படும் வகையில் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். மீறி கோபப்படும் படி செய்தால் உடனே சாக்லேட்டை தூக்கி வீசி விட்டு ஓடி விடுங்கள் என பதில் அளித்துள்ளார் இலியானா.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்