விஜய்க்கு பாதி சம்பளம் கொடுங்க, நாங்க இத பண்றோம்.. நொந்து போன தயாரிப்பாளர்கள்

சமூக வலைதளங்களில் தற்போது தளபதி விஜய்யை பற்றி தான் அதிகம் பேசி வருகின்றனர். நீண்ட நாட்களாக விஜய் கொரானா நிவாரண நிதி எதுவும் தராமல் இருந்ததால் நான்கு பேர் நான்கு விதமாகப் பேச ஆரம்பித்தனர்.

இந்நிலையில் விஜய் கொரானா நிதிக்காக 1.30 கோடியும் ரசிகர் மன்றம் நலனுக்காக சுமார் 50 லட்சமும் மொத்தம் 1.80 கோடி நிவாரண நிதியாக செலவு செய்ய முடிவெடுத்துள்ளார். இந்த செய்தி தான் தற்போது இணையதளங்களில் ட்ரெண்டிங்.

அதுமட்டுமில்லாமல் ஊரடங்கு உத்தரவால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வட்டிக்கு கடன் வாங்கிய தயாரிப்பாளர்கள் மிகவும் வேதனையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதன்படி கடன் கொடுத்தவர்களிடம் ஊரடங்கு முடியும் வரை வட்டிகளை குறைத்துக் கொள்ளும்படி கேட்டுள்ளனர். அதற்கு கந்துவட்டிக்காரர்கள், விஜய்க்கு கொடுக்கும் 100 கோடி சம்பளத்தில் பாதியை மட்டும் அவருக்கு கொடுங்கள் என்கிறார்களாம்.

அப்படிச் செய்தால் நாங்களும் வட்டியைக் குறைத்துக் கொள்கிறோம் எனவும் பேசியுள்ளனர். இதனால் என்ன செய்வது என்றே புரியாமல் புலம்புகிறார்கள் தயாரிப்பாளர்கள். இன்றைய தேதியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தளபதி விஜய் தான் உள்ளார் என்பதை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார்.

விஜய் பிகில் படத்துக்காக 50 கோடியும், மாஸ்டர் படத்துக்கு 80 கோடியும், தளபதி 65 படத்திற்கு 100 கோடியும் சம்பளம் வாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்