சூர்யாவை காளை மாடுகளுடன் மல்லு கட்ட வைக்கும் வெற்றிமாறன்.. வாடிவாசலில் சம்பவம் இருக்கு

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா தற்போது ஹரி இயக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அதனைத் தொடர்ந்து கலைப்புலி S தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

ஹரியின் அருவா படத்தைவிட வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்குத்தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஹரியின் பழைய பார்முலாக்கள் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பலிக்கவில்லை.

மீண்டும் தன்னுடைய ஆரம்பகால சினிமாவான குடும்ப கதையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்க ரெடியாகிவிட்டார் ஹரி. ஆனால் ஏற்கனவே தோல்விகளில் இருக்கும் சூர்யாவுக்கு வெற்றிமாறனின் படம் முதலில் வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

வாடிவாசல் படத்தின் தொடக்கமாக சுமார் 60 ஜல்லிக்கட்டு காளை மாடுகளை ஒரே இடத்தில் வைத்து அவற்றுடன் சூர்யாவை பழகவிட்டு பின்னர் படக் காட்சிகளை படமாக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம்.

அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று நிலையில் ஊரடங்கு உத்தரவால் அதில் தடை ஏற்பட்டுள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் எதுவும் இல்லாமல் முடிந்தவரை உண்மையாக படமாக்குவதில் உறுதியாக இருப்பார் வெற்றிமாறன். இந்த குதிரை எப்ப வந்தாலும் பந்தயம் அடிக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.

மேலும் வாடிவாசல் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டதாகவும் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்