7 பெரிய நடிகர்கள் மிஸ் செய்த படம்.. ஒரு சின்ன ஹீரோ நடித்து மெகா ஹிட்

தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரிய நடிகர்கள் மிஸ் செய்த நிறைய படங்கள் சின்ன ஹீரோக்கள் நடித்து கதையால் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்திருக்கும்.

அந்தவகையில் கிட்டத்தட்ட ஏழு ஹீரோக்கள் கையில் மாறி கடைசியாக சின்ன ஹீரோவின் கையில் சிக்கி செம ஹிட்டடித்த படம் கோ. ஜீவா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் இளைய சமுதாயத்தின் அரசியல் கதையாக வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்த படத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தவர் தல அஜித் தான். அஜித்துக்கு இந்த படம் செட்டாகாது என விட்டு விட்டு சிம்புவை வைத்து ஓகே பண்ணி போட்டோ ஷூட் வரை சென்றது. அதன் பிறகு சிம்பு விலகிவிட அதே கதை நடிகர் விக்ரமிடம் சென்றுள்ளது.

விக்ரம் கதையை ஓகே செய்த பிறகு தயாரிப்பாளரை நான் தான் சொல்வேன் என அடம்பிடிக்க தன்னை நம்பிய தயாரிப்பாளரை ஏமாற்ற கூடாது என விக்ரமை விட்டு விலகியுள்ளார் கே வி ஆனந்த்.

அதன் பிறகு நடிகர் கார்த்திக் நடிக்க ஓகே சொல்லி பிறகு கால்ஷீட் பிரச்சினையால் கைவிடப்பட்டது. கடைசியாக கே வி ஆனந்த் ஆர்யாவுக்கு கால் பண்ண, அவர் போன் எடுக்காத பட்சத்தில் கடைசியாகத்தான் ஜீவா வசம் சென்றது.

அப்போதுகூட கதை கேட்கும்போது சிம்பு தான் மெயின் ரோல் எனவும், தனக்கு ஏதாவது சின்ன கதாபாத்திரம் இருக்குமென ஆர்வம் இல்லாமல்தான் கதையை கேட்டாராம் ஜீவா. எல்லா காட்சியிலும் ஜீவாவே வர, திடீரென சந்தேகமடைந்த ஜீவா, எல்லா இடத்திலும் தானே வந்தால் சிம்பு எங்கே நடிப்பார் என கேட்டுள்ளார். அப்போதுதான் ஜீவாவுக்கு விஷயமே புரிந்ததாம் சிம்பு விலகிவிட்டார் என்று.

அதன்பிறகு ஜீவா நடிப்பில் உருவான கோ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதேபோல் வில்லன் அஜ்மல் கதாபாத்திரத்தில் நடிக்க சசிகுமார் மற்றும் அஞ்சாதே நரேன் ஆகியோரிடம் கேட்டுள்ளார்கள். இறுதியில்தான் அஜ்மலை ஓகே செய்தாராம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்