அஜித் மிஸ் பண்ணிய சூப்பர் ஹிட் படம்.. அவர் நடித்திருந்தாலும் செட் ஆயிருக்காது

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக மாறிவிட்டார். அஜீத்தை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பல இயக்குனர்களும் அஜித்தை வைத்து படம் இயக்க ஆவலாக உள்ளனர். ஆனால் அப்படி அஜீத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தும் அதை நிராகரித்து விட்டதாக பிரபல இயக்குனர் கூறியது அவரது ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஜீவா, அஜ்மல், கார்த்திகா போன்றோர் நடிப்பில் உருவாகி மெகா ஹிட்டடித்த படம் கோ. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தால் இந்த படத்தை எல்ரெட் குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து இருந்தார். கே வி ஆனந்த் இயக்கி இருந்தார்.

அயன் படத்திற்கு பிறகு தல அஜித்தை வைத்து படம் இயக்க கேவி ஆனந்துக்கு வாய்ப்பு வந்துள்ளது. அப்போது கோ படத்தின் கதை மட்டும்தான் கேவி ஆனந்திடம் இருந்ததாகவும், அஜீத்துக்கு ஏற்ற மாஸ் கதை தன்னிடம் இல்லை என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம்.

விரைவில் தல அஜித் கான மாஸ் கதை ஒன்றை உருவாக்கி அவரை இயக்குவேன் எனவும் நம்பிக்கை கொடுத்துள்ளார் கேவி ஆனந்த்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்