கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றியை நெருங்கிவிட்டோம் – ட்ரம்ப் உறுதி

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஏறக்குறைய வெற்றியை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக உள்ளன. சில நாடுகள் தடுப்பு ஊசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி குறித்த செயற்றிட்டத்தில் வெற்றியை ஏறக்குறைய அமெரிக்கா நெருங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. தடுப்பு ஊசியை பரிசோதிப்பதில் நாங்கள் பரிசோதனை தொடங்கி இருக்கிறோம்.

இந்த பரிசோதனை தொடங்கியதும் அதற்கு சில நாட்கள் ஆகலாம். ஆனால் தடுப்பு ஊசியை நாங்கள் கண்டுபிடிப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க பிரதிநிதிகள் சபையினால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 484 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூன்று தடவைகள் குறித்த நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இது நான்காவது தடவடியாகும்.
குறித்த நிதியானது அமெரிக்காவின் சிறு வர்த்தகம் மற்றும் வைத்தியசாலை மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.