ஒரே பந்தில் 6 சிக்சர்கள் அடித்த விஜய்.. தளபதியின் ராஜதந்திரம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக இருப்பவர் தளபதி விஜய். சமீபகாலமாக தளபதி விஜய்யின் படங்கள் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பேசப்படும் படங்களாக மாறி வருகின்றன.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் வெளியீட்டில் சிறிது மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது மாஸ்டர் படத்தைப் பேன் இந்தியா படமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கொரானா பாதிப்பால் தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களிடம் நிதி உதவி கேட்டு வருகின்றனர். அந்த வகையில் உதவி கேட்டு பல நாட்களாகியும் தளபதி விஜய் அதைப் பற்றி வாய் திறக்காமல் இருந்ததால் பலரும் வாய்க்கு வந்தபடி பேசி விட்டனர்.

ஆனால் சமீபத்தில் விஜய் 1.30 கோடி தருவதாக அறிவித்து பேசி அவர்களை வாயடைக்கச் செய்து விட்டார். விஜய் பிரதமர் நிதி நிவாரணமாக 25 லட்சமும், முதலமைச்சர் நிவாரண நிதியாக 50 லட்சமும், பெப்சி யூனியனுக்கு 25 லட்சமும், கேரளா முதலமைச்சர் நிவாரண நிதியாக 10 லட்சம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக தலா 5 லட்சம் பணமாக கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் மக்கள் மன்றம் இயக்கத்தின் மூலம் மொத்தம் 50 லட்சம் அளவுக்கு தனியாக உதவிகள் செய்து வருகிறார். அனைத்து நடிகர்களும் தங்களது மொழிக்கும் பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுத்து கொண்டிருக்கையில் தளபதி விஜய் மட்டும் தன்னுடைய மாநிலம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் பணம் கொடுத்து உதவியுள்ளார்.

இதனை தளபதி ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மற்ற மாநில ரசிகர்களும் தளபதி விஜய்யின் மேல் மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

எது எப்படியோ, லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து ஒரே பந்தில் 6 சிக்சர்கள் அடித்து அனைத்து மாநில ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நம் தளபதி என கோலிவுட் வட்டாரமே சிலாகித்துக் கொண்டிருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.