எம்மா! இதோட நம்ம டீல் முடிஞ்சது.. ஆளவிடு சாமி என ஜோதிகாவை பாதியில் விட்டு ஓடிய நிறுவனம்

தமிழ் சினிமாவில் பெண்களுக்கான தைரியமான கதாபாத்திரத்தை எடுத்து நடிப்பதில் ஜோதிகா முதலிடத்தில் உள்ளார். அந்த புகழின்  உச்சியை அடைந்து கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது, சில தினங்களுக்கு முன்பு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா கோவில்களுக்கு காசை செலவிடுவதை விட மருத்துவமனை, பள்ளிகளுக்கு செலவு செய்யுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

இது ஒருபுறம் ஒப்புக்கொண்டாலும் தமிழினத்தை தலை நிமிரச் செய்த தஞ்சை பெரிய கோயிலை எடுத்துக்காட்டாக வைத்து கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இன்றளவும் வரலாற்று சிறப்புமிக்க ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை கோவிலுக்கு செலவிடுவது போன்று எடுத்துக்காட்டாக அவர் கூறியது தான் தவறு என்று தற்போது சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் வைரலானது.

ஒரு பத்திரிக்கையாளர் நாங்க சொல்றது இது சர்ச்சைக்கான விவாதமே அல்ல, ஏனென்றால் அவர் கூறியது கோவில்களுக்கு அவ்வளவு காசை செலவிடுவது போல மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு செலவு செய்தால் நல்லது என்று தெரிவித்திருப்பார். இதனை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு பிடிக்காத சமூகநல வாசிகள் ஊதி பெரிதாக்கி விட்டனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இது ஒருபுறமிருக்க ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஆன்லைனில் அதாவது OTT-யில் வெளியிடுவதால் அடுத்த சர்ச்சை கிளம்பியது. இனி 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் வெளிவரும் படங்களை நாங்கள் திரையிடமாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதனால் சூர்யாவிற்கு வெளிவர காத்துக்கொண்டிருக்கும் சூரரைப்போற்று படமும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இப்படி அடிக்குமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் ஜோதிகாவிற்கு வேட்டு வைத்தது பிரபல நிறுவனம்.

அதாவது சக்தி மசாலா நிறுவனத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார் பிராண்ட் அம்பாசிடர் ஒப்புதலை தற்போது நிராகரித்துள்ளது. அதாவது இன்னும் கால அவகாசம் இருந்த சூழ்நிலையில் கூட ஒப்பந்தத்தை அந்நிறுவனம் ரத்து செய்துள்ளது. ஜோதிகாவை நீக்கியது அந்த நிறுவனத்திற்கு தான்  நஷ்டமே தவிர அவர்களுக்கு அல்ல ஏனென்றால் கோடி கோடியாக இன்றும் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஜோதிகாவிற்கு போதாத காலம் என்று ரசிகர்கள் ஒருபுறம் புலம்பி வருகின்றனர். லாக் டவுன் முடிவதற்குள் இந்த பிரச்சனைகள் சுமூகமாக முடிய வேண்டும் என்று சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.