ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் நடித்த விஜய்.. வாவ்! அது என்ன படம் தெரியுமா?

ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மிஸ்கின் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் அதற்கு முன்னதாகவே தளபதி விஜய்யின் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார் மிஸ்கின்.

மிஸ்கின் இயக்கம் என்றாலே யோசிக்க முடியாத திருப்பங்கள் இருக்கும் அந்த வகையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, அஞ்சாதே, துப்பறிவாளன் போன்ற படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பார்வையற்ற உதயநிதி ஸ்டாலினாக நடித்த சைக்கோ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை வாங்கியது. மிஸ்கின் என்றாலே வித்தியாசம் யோசிக்க முடியாத சிந்தனைகள் என்று தமிழ் சினிமாவில் பாராட்டுப் பெற்றவர்.

இவர் தளபதி விஜயின் 2002இல் வெளிவந்த யூத் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வின்சன் செல்வா இல்லாத நேரத்தில் மிஸ்கின் சில காட்சிகளை டைரக்ட் செய்திருக்கிறார் அதில் விஜய்யும் நடித்திருக்கிறார்.

அந்த படத்துல் ‘ஆல் தோட்டா பூபதி’ பாடல் வரிகள் இதற்கு முன் வேறு வடிவத்தில் இருந்ததாம் இவர்தான் அந்த வரிகளை மாற்ற சொன்னாராம். கடைசில் அந்த பாடலும் செம ஹிட். ‘Chiru Navvuto’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் மூவி தான் யூத் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.