கொரோனாவை கட்டுப்படுத்த ஜப்பான் அதிரடி நடவடிக்கை: ரஷ்யா- சவுதி உட்பட 14 நாடுகளுக்கு தடை
ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா உட்பட மேலும் 14 நாடுகளிலுள்ளவர்கள், நாட்டுக்குள் நுழைய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வரும் என ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் இந்த தடை உத்தரவின் மூலம், வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நுழைவுத் தடை பெற்ற மொத்த நாடுகளின் எண்ணிக்கை மற்றும் பிரதேசங்களின் எண்ணிக்கையை 87ஆக உயர்ந்துள்ளது.
சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதிலுமிருந்து வரும் பயணிகள் இந்த நடவடிக்கைகளின் கீழ் ஜப்பானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு மெதுவாக பதிலளித்ததற்காக ஜப்பான் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பல வாரங்களுக்கு முன்னதாகவே, தங்களது குடியிருப்புகளையும், கடைகளையும் உணவகங்களையும் மூடுமாறு கட்டாயப்படுத்தியிருந்தாலும், ஜப்பானில் இதுபோன்றதொரு எவ்வித கட்டுபாடும் விதிக்கப்படவில்லை.
தற்போது ஜப்பானில் 13,441பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 372பேர் உயிரிழந்துள்ளனர். 1,809பேர் குணடைந்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை