இதுதான் லீக் ஆன வலிமை படத்தின் போஸ்டரா? அல்லது ரசிகர் கைவண்ணமா? இணையதளமே அலறுது

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், தல அஜித் நடித்துவரும் வலிமை படத்திலிருந்து ஒரு போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை தயாரிப்பு நிறுவனம் இப்பொழுது நிறைவேற்றுவதாக இல்லை.அதனால் ரசிகர்களே வேட்டையை ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் ஒரிஜினல் போஸ்டரை மிஞ்சும் வகையில் சில போஸ்டர்கள் இணையத்தில் உலா வருகின்றது. அதன் தொகுப்பே இந்த பதிவு, இதைப் பார்க்கும்போது பிட் ஆன அஜித், சால்ட் அண்ட் பேப்பர் இன்றி ஹேர் ஸ்டைல், சில ஷூட்டிங் சமய போட்டோ என ட்விட்டரில் அவர் ரசிகர்கள் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.

இதனை உருவாக்கிய ரசிகர் போஸ்டரை தயாரிப்பு நிறுவனத்திற்கு ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இதனை பார்க்கும் போது எங்களைவிட மிரட்டலான போஸ்டர் உங்களால் வெளியிட முடியுமா என்று சவால் விடுவது போல உள்ளது.

ரசிகர்கள் தல அஜித்தின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த போஸ்டர் இணையதளத்தில் அதிக அளவில் லைக்ஸ் மட்டும் ஷேர்களை பெற்று வருகிறது. வலிமை படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் பொங்கலுக்கு வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

valimai-cinemapettai

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்