பாகுபலி படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை நிராகரித்த பெரிய நடிகர்கள்.. முழு லிஸ்ட்

இந்திய சினிமாவில் பாகுபலி எவ்வளவு பெரிய சாதனையை செய்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இரண்டு பாகங்களாக வெளிவந்து உலகம் முழுவதும் 2000 கோடி வரை வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில் பாகுபலி படம் முதலில் தெலுங்கு நடிகர்களை வைத்து எடுப்பதாக முடிவு செய்யப்படவில்லை என ராஜமௌலி தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் பெரிய பிரம்மாண்ட படமாக எடுப்பதால் ஹிந்தி நடிகர்களை நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டினாராம் ராஜமவுலி. அந்த வகையில் பாகுபலி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது ஹிந்தி நடிகர் ரித்திக் ரோஷன் தானம். ஏற்கனவே ஜோதா அக்பர் என்ற அரச கதையில் நடித்ததால் இந்த படத்தை ஒப்புக் கொள்ளவில்லையாம்.

hrithi-roshan

பல்வாள் தேவனாக ராணா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பிரபல ஹிந்தி நடிகர் ஜான் அபிரகாம் தான். ராஜமாதா கதாபாத்திரத்தில் முதல் முதலில் ராஜ மவுலி அணுகியது நடிகை ஸ்ரீதேவி தான். அதிக சம்பளம் கேட்டதாலும் மேற்கொண்டு கதையில் அதிக தலையீடு இருந்ததாலும் நிராகரித்து விட்டாராம்.

jhon-abraham

பாகுபலி கதாபாத்திரத்திற்கு இணையான புகழ்பெற்றது சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் தான். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதிலிருந்துதான் இரண்டாம் பாகம் உருவாகியது.

ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் மலையாள நடிகர் மோகன்லால் தான். ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஜமவுலி அவரை தேர்வு செய்தாராம்.

mohan-lal

அதேபோல் தமன்னா நடித்த அவந்திகா கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்தது இந்தி நடிகை சோனம் கபூர் தான் என செய்திகள் கிடைத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.