அயர்லாந்தில் கார் விற்பனை சரிவு: ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனை!

அயர்லாந்தில் கார் விற்பனை ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 96 சதவீதம் குறைந்துள்ளதாக, சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் குறித்த புள்ளிவிபரங்கள், ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன என்பதைக் காட்டுகின்றன.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் மார்ச் மாதத்தில் பெரும்பாலான மோட்டார் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

இதன் காரணமாக அயர்லாந்தில் கார் விற்பனை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கடந்த மார்ச் மாதம், கார் விற்பனை புள்ளிவிபரங்களும் கிட்டத்தட்ட 64 சதவீதம் குறைந்துள்ளன.

கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கான கார் விற்பனை புள்ளிவிபரங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளன. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கார் விற்பனை, கடந்த பெப்ரவரி மாதம் 12 சதவீத வளர்ச்சியை காட்டியது.

ஆனால், இப்போது பல வாகன விற்பனை முகவர்கள், இந்த விற்பனையின் வீழ்ச்சியால், இழப்பிலிருந்து மீள்வது கடினம் என கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.