அமேசானில் மாஸ்டர் ரிலீசுக்கு விஜய்யின் பதில்.. காவடியின் பாரம் சுமக்கிறவனுக்குதான் தெரியும்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அட்டகாசமான அதிரடி படமாக உருவாகியிருக்கிறது மாஸ்டர். ஆனால் மாஸ்டர் படம் ரிலீசில் மண்ணை அள்ளிப் போட்டது கொரானா. இருந்தாலும் படக்குழுவினர் எப்போது ஊரடங்கும் முடிவடையும் என வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இப்போதைக்கு கொரானா பிரச்சனை முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இதனால் கவலையில் இருந்த தயாரிப்பாளருக்கு கடவுள் போல் வந்தார்கள் OTT நிறுவனங்கள். எப்படியாவது பெரிய ரேட்டுக்கு மாஸ்டரை விற்று விடலாம் என நினைத்த தயாரிப்பாளருக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டாராம் தளபதி விஜய்.

தளபதி விஜய் தனது படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்க்க வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புகிறாராம். அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் விஜய் படத்தை OTTயில் விற்றால் பின்னர் அவருக்கு மவுசு குறைந்து விடும் எனவும் அவரை சார்ந்தவர்கள் ஏத்தி விட்டு விட்டார்கள் போல.

நான் தலை கீழாகத்தான் குதிப்பேன் என தளபதி விஜய் படத்தை தியேட்டரில் தான் வேலை செய்வேன் என ஒற்றை காலில் என அடம் பிடிக்கிறாராம். ஆனால் கடனை வாங்கிய தயாரிப்பாளர், மயிரை கட்டி மலையை இழுப்பதை போல வட்டி கட்டி நொந்து விட்டாராம்.

தற்போதைய சூழ்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு மேலும் திரையரங்குகள் திறக்கப்படாது என்கிற நிலைமைதான் உருவாகியிருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் மாஸ்டர் படமே அடுத்த பொங்கலுக்கு தான் வெளியாகும் போல. என்னதான் விஜய் நஷ்டம் ஏற்பட்டால் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னாலும் தயாரிப்பாளருக்கு அதில் உடன்பாடு இல்லையாம்.

எப்படியாவது மாஸ்டர் படத்தை OTTயில் வெளியிடலாம் என விஜய்யிடம் குட்டிக்கரணம் போட்டு கொண்டிருக்கிறாராம். தலையசைப்பாரா தளபதி? வாய்ப்பில்லை என்கிறது ரசிகர் பட்டாளம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.