வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து தான் வைரஸ் பரவியது: ட்ரம்ப் நம்பிக்கை

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று, சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியது என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, வைரஸ் தொற்று பரவியதற்கு சீனாவே காரணம் என கருதுகின்றது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், தினசரி நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவை சாடுவது வழக்கம்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று, சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியது என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக  ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஒருவித கொடூரமான ‘தவறு’ காரணமாக சீனா கொரோனா வைரஸை உலகில் கட்டவிழ்த்திருக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாகவே, வுஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார்.

அத்துடன் இது தொடர்பாக அமெரிக்கக் குழு, வுஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது.

வுஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட விபத்தின் போதே இந்த வைரஸ் பரவியதாக, இஸ்ரேலிய ஆய்வாளர் ஒருவர் மற்றும் நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞரான பிரான்சைச் சேர்ந்த லூக் மோன்தக்னேர் ஆகியோர் வைரஸ் பரவிய ஆரம்ப கட்டத்திலேயே கூறியிருந்தனர் என்பது குறிப்பிடதக்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்