தல கூட இப்ப விட்டாலும் ஜோடி போடுவேன்.. அஜித்துடன் மீனா இருக்கும் வைரல் புகைப்படம்
90களில் தென்னிந்திய சினிமாவை ஆண்ட நடிகைகளில் மிக முக்கிய பங்கு மீனாவுக்கு தான். அழகும் கவர்ச்சியும் நிறைந்த இவர் அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக விளக்கியவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தை தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
பல பிரபலங்களுடன் நடித்த மீனா தல அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே, வில்லன், சிட்டிசன் போன்ற பிரமாண்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒதுங்கியிருந்த மீனா தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார், அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் தற்போது நடித்து வருகிறார். மீனா மற்றும் தல அஜித் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கருத்துக்களேதுமில்லை