தம்பி அட்லீ இனி நீ OTT டைரக்டர் மட்டும் தான். தியேட்டர் பக்கம் வந்துடாத என கிழித்த ஓனர்கள்

சமீபகாலமாக தியேட்டர்காரர்களும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வலுத்துக் கொண்டே போகின்றன. இருக்கும் பிரச்சனைகளை பார்த்தால் இனிமேல் படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டார்கள் போல.

அனைத்து தயாரிப்பாளர்களும் பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர சிறிய படங்கள் அனைத்துமே OTT தளத்தில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள். அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் வெளிவர உள்ளது.

இதனைத்தொடர்ந்து சந்தானத்தின் படங்களும், அட்லீ தயாரித்துள்ள அந்தகாரம் போன்ற படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன. இந்நிலையில் பிரபல தியேட்டர் உரிமையாளர் ஒருவர் அட்லீயை பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது, அட்லீயின் முதல் படம் ராஜா ராணியை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் OTT யில் ரிலீஸ் செய்திருந்தால் அவரது நிலைமை என்னவாகியிருக்கும் என்று அவருக்கே தெரியும். இந்தளவு பெரிய டைரக்டராக வலம் வர தியேட்டர்காரர்களே காரணம் என ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வருடத்திற்கு குறைந்தது 800 சிறிய படங்கள் வருவதால் ஆயிரம் தியேட்டர்களை வைத்துக் கொண்டு எப்படி வெளியிடுவது எனவும் கவலை தெரிவித்துள்ளார். பெரிய நடிகர்களின் படம் பெரிய அளவில் ஓடினாலும் எங்களுக்கு லாபம் கிடையாது, ஆனால் சிறிய படம் பெரிய அளவில் ஓடினால் எங்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும் என்பதே எங்கள் குறிக்கோள்.

முடிந்தவரை சிறிய திரைப்படங்களை நிறைய காட்சிகள் ஓட்டவே முடிவு செய்வோம். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இனி பெரிய நடிகர்கள் உருவாகக் கூடாது என யாரோ பிளான் போட்டு செய்வதைப் போல் தெரிகிறது.

சீரியலில் நடிக்கும் நடிகர்களை போல அனைவரும் ஆன்லைன் நடிகர்களாக மட்டுமே வளர முடியும் எனவும் தியேட்டர் உரிமையாளர் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.