சிவாவுக்காக அனைத்தையும் விட்டுகொடுத்த தனுஷ்.. ஆனால் வீட்டு பூனைனு நினைச்சா காட்டு பூனையால இருக்கு

தமிழ் சினிமாவில் அடிபட்டு மிதிபட்டு நடிகர் என்ற அந்தஸ்தைப் பெறுவது சற்று கடினம் தான். அதேபோல், சிவகார்த்திகேயன் சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு அங்கீகாரம் கிடைத்த படம் என்று பார்த்தால் எதிர்நீச்சல், அந்த படம் வெளிவந்து இன்றுடன் 7 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் அந்த படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் ஒரு சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது வெற்றி மாறனிடம் 3 படங்களில் துணை இயக்குனராக வேலை பார்த்தவர் தான் துரை செந்தில்குமார். இவர் ஆடுகளத்தின் போது தனுஷிடம் இந்தக்கதையை கூறியதாகவும், இந்த கதை தனுசுக்கு உடனே பிடித்து விட்டதாம்.

அதற்கு பின்னர் தான் தனுஷ் இந்த கதையில் சிவகார்த்திகேயன் நடித்தால் நல்லா இருக்கும் என்று வாய்ப்பு கொடுத்தாராம். அதனுடன் சேர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தால் சம்பளம் கூட கொடுக்க வேண்டாம். இந்த படத்தின் வசூல் வேட்டை எப்படி என்று பார்க்கலாம்,

அதாவது 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எதிர்நீச்சல் படம் கிட்டத்தட்ட 30 கோடி வரை வருமானம் ஈட்டியது. இதனால் தான் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதில் தனுசுக்காக வைத்திருந்த பாடலை கூட சிவகார்த்திகேயனுக்காக கொடுத்தாராம்.

ஆனால் இன்று தனுசிடமே போட்டி போடும் அளவு ஆகும் என்று தெரியவில்லையாம். வீட்டு பூனைனு நினைச்சி வளர்த்தால் அது காட்டு பூனையா இருக்காம்.

அதேபோல் பிரியா ஆனந்த் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாக சமந்தா, அமலாபாலிடம் கதை கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இதில் நடிக்கவில்லையாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.