அதல பாதாளத்திற்கு போன மெர்சல் தயாரிப்பாளர்.. அட்லீய கழட்டிவிட்டு மீண்டும் வர சொன்ன விஜய்

தமிழ் சினிமாவில் பாரம்பரிய தயாரிப்பாளர்களில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ். தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் ராமநாராயணன் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து பெரிய வெற்றிகளை குவித்து தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் பிடித்தவர்.

சமீபகாலமாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை அவரது மகன் முரளி தான் நிர்வகித்து வருகிறார். பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழிக்கு ஏற்ப பெரிய படங்களை தயாரிக்க ஆசைப்பட்டு தற்போது கடனில் மூழ்கி உள்ளார் பாவம். மெர்சல் படம் மிக பிரம்மாண்டமாக ஆரம்பித்து பெரிய அளவில் வெற்றியை குவித்தாலும் அந்த படத்தின் மொத்த வசூல் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் கடனை கட்டவே சரியாகி விட்டதாம்.

அதுமட்டுமல்லாமல் சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா படத்தை ஆரம்பித்து டிராப் செய்தது குறிப்பிடத்தக்கது. எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான இரவாகாலம் போன்ற படமும் நிலுவையில் உள்ளது. ஒரே நேரத்தில் பல படங்களை தயாரிக்க ஒப்புக்கொண்டதால் மாட்டிக்கொண்ட முரளி, மெர்சல் படத்தில் சம்பாதித்த மொத்தப் பணத்திலும் கடனை கட்டி விட்டு தற்போது அக்கடா என இருக்கிறாராம்.

இருந்தாலும் விட்டதை பிடிக்க வேண்டும் அல்லவா. சமீபத்திய பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள முரளி, மெர்சல் படம் பெரிய வெற்றிப் படம் என்பதை முதலில் ரசிகர்கள் உணர வேண்டும் என்பதை ஆணித்தனமாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தேவை இல்லாத செய்திகளை நாங்கள் கண்டு கொள்வதும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவிவரும் தியேட்டர் மற்றும் தயாரிப்பாளர் இடையே நடக்கும் தகராறுகள் சம்பந்தமாக பேட்டி எடுக்கும்போது இந்த முக்கிய செய்தி ஒன்றை கூறியுள்ளார். தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸுக்கு படம் செய்த பிறகு தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

அட்லி மெர்சல் படத்தில் வைத்த செலவுகளை பார்க்கும்போது கண்டிப்பாக விஜய் அட்லி கூட்டணி இணைய மீண்டும் வாய்ப்பில்லை என்கிறது தேனாண்டாள் வட்டாரம்.

இருந்தாலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு கண்டிப்பாக அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த படத்துக்கு அந்த அட்லீய மட்டும் வர வச்சிடாதிங்க என அனைவரும் வேண்டுகோள் வைத்துள்ளனர். அஞ்சு ரூபா மிட்டாய்க்கு ஐம்பது ரூபா பில் போடுவாரம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்