கௌவரம் கெளரவம்னு இப்படி மொத்தமா காலி பண்ணிடானுங்களே! கழுகு போல் பறந்து குருவி ஆன விஜய் ஆண்டனி

கழுத தேஞ்சு கட்டெறும்பான கதையாக வர வர விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் எதுவுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. அனைத்தும் ரசிகர்களை தியேட்டரில் தூங்கவைக்கும் படமாகவே நடித்து வருகிறார்.

ஒரு காலத்தில் இசையமைப்பாளராக நாக்க முக்க நாக்க முக்க என தமிழக ரசிகர்களையே ஒரு முக்கு முக்கி ஆட்டம் போட வைத்தவர் தான் விஜய் ஆண்டனி. பேசாமல் இசையமைப்பாளர் ஆகவே இருந்திருக்கலாம்.

தொடர்ந்து வேட்டைக்காரன், வேலாயுதம் போன்ற பெரிய நடிகர் விஜய்யின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்தார். அந்த சமயத்தில் தொடர்ந்து இசையமைப்பாளர்கள் ஹீரோவாக அறிமுகமாக விஜய் ஆண்டனிக்கு அந்த ஆசை வந்ததில் தப்பில்லையே.

இருந்தாலும் மற்றவர்களை போல ஏனோதானோ என்று படம் நடிக்காமல் ஆரம்பத்திலேயே அக்கறையாக சினிமா நல்ல கதையை தேர்ந்தெடுத்து நான் எனும் படத்தில் நடித்தார். ஆரம்பமே அட்டகாசமாக தொடங்கிய விஜய் ஆண்டனியின் தொடர்ந்து சலீம், சைத்தான், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற தரமான படங்களை கொடுத்தார்.

அதிலும் பிச்சைக்காரன் படம் மொழி கடந்து தெலுங்கில் சுமார் 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் பிறகு விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் ஏற்பட்டது. பிறகு யார் பேச்சைக் கேட்டு மாஸ் எனும் குப்பையில் விழுந்தாரோ தெரியவில்லை.

எமன், அண்ணாதுரை, காளி போன்ற படங்களின் மூலம் தனது மார்க்கெட்டை இழந்து தடுமாறி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் தேர்வு செய்யும் கதைகளும் அநியாயத்துக்கு அதர பழசாக உள்ளது. எப்படியோ தட்டுத்தடுமாறி கொலைகாரன் எனும் படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்து விட்டார்.

இனி அடுத்தடுத்த படங்களில் கவனமாக நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற படங்கள் வெளிவர உள்ளன. விஜய் ஆண்டனியிடம் ரசிகர்கள் எதிர்பார்த்தது எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார் என்பதுதான்.

இதைப் புரிந்துகொள்ளாமல் மாஸ் என்கிற குப்பையில் விழுந்து தடுமாறிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு இனிவரும் படங்களாவது வெற்றி பெற வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.