மாஸ்டர் படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. முழு படமும் எப்படி இருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவே அடுத்து அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை தான். ஏற்கனவே கொரானாவால் தியேட்டர் வருவதற்கே தயங்கும் மக்களை இழுக்கும் ஒரே சக்தி மாஸ்டர்தான் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றன.

மேலும் லாக்டோன் முடிந்தபிறகு முதலில் விஜய் படத்தை வெளியிடவே அனைவரும் விரும்புவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது. கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

மேலும் விஜய்சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி உள்ளது. அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து விட்டது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மாளவிகா மோகனனுக்கு தமிழில் டப்பிங் பேசி உள்ளவர் ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நடித்த ரவீனா என்பவர்தான். டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதால் முழு படத்தையும் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே பார்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

அந்த வகையில் மாஸ்டர் படத்தை பார்த்த ரவீனா, தளபதி விஜய் இவ்வளவு துணிச்சலான காட்சிகளில் நடிப்பார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றும், இந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியாகவே இல்லை என வெறியில் இருந்த ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக ரவீனா கூறியுள்ளது படத்தை எப்படியாவது முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்