உங்களுக்கு ஒரு கும்பிடு.. உங்க படத்திற்கு ஒரு கும்பிடு.. கமலால் இழுத்து மூடப்பட்ட லைகா நிறுவனம்

கமலஹாசன் ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன்2 படம் டிராப் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உச்சகட்ட கவலையில் உள்ளனர்.

சமீபகாலமாக வெளியாகும் கமலின் படங்கள் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அமையவில்லை என்றாலும் ஷங்கர் கூட்டணியில் கமல் இணைவதால் இந்தியன்2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

பெரும் பொருட்செலவில் இந்தியன் 2 படத்தை தயாரித்து வந்த லைகா புரோடக்சன்ஸ் சமீபகாலமாக கமல்ஹாசனால் நிறைய பிரச்சனைகளை சந்தித்ததில் தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடும் முடிவுக்கு வந்து விட்டதாம்.

கமலஹாசன் லைகா புரோடக்சன்ஸ் கூட்டணியில் உருவாக இருந்த சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கின்றான் ஆகிய படங்கள் பாதியிலேயே டிராப் செய்யப்பட்டு லைக்கா நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. சரி என சங்கர் கமல் கூட்டணியில் படத்தை தயாரித்து வந்த லைக்கா நிறுவனம் சமீபத்தில் நடந்த பிரச்சனையால் கமலுடன் பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் இனி தமிழில் படம் தயாரிக்க போவதில்லை என முடிவு எடுத்து விட்டார்களாம். இதனால் இந்தியன் 2 படத்தில் எவ்வளவு செலவு பண்ணி இருந்தாலும் மொத்தத்தையும் திருப்பதி உண்டியலில் போட்டதாக நினைத்துக் கொள்கிறோம் என முற்றுப்புள்ளி வைத்து விட்டார்களாம்.

இதனால் சங்கர் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. அனேகமாக அடுத்து சன் பிக்சர்ஸ் இடம் தஞ்சம் அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்