நாக்க முக்காவில் வந்து நாக்கு தள்ளி போன நகுல்.. என் வாழ்க்கை இப்படி ஆகி போச்சே என வருத்தம்

பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னர் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நகுல். முதல் படத்திலேயே நாக்க முக்க என்ற பாட்டின் மூலம் படு ஃபேமஸ் ஆனார்.

அதன்பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த மாசிலாமணி படம் வர்த்தக ரீதியாக அவருக்கு ஒரு நல்ல படமாக அமைந்தது. இவரும் மாஸ் நடிகராக வேண்டும் என ஆரம்பத்திலேயே அதற்கு அடி போட்டு அடிமேல் அடி வாங்கியவர். கந்தக்கோட்டை எனும் படத்தில் மாஸ் நடிகராக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை கெடுத்துக் கொண்டார். அதன் பிறகு எல்லாமே இறங்கு முகம்தான்.

நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தின் மூலம் நான் சினிமாவுக்கு டாட்டா சொல்ல போகிறேன் என்பதை போல மொக்கை படத்தில் நடித்து தன்னுடைய இமேஜை கெடுத்து கொண்டார். இப்படியே போனால் வேலைக்காகாது என சுதாரித்து விட்டார் போல.

அதன்பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்கள் வர்த்தக ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று மீண்டும் நகுலை நல்ல நாயகனாக நிலைநிறுத்தியது.

லட்சுமி எப்போதுமே ஓர் இடத்தில் இருக்க மாட்டார் என்பது சரிதான் போல. இவரின் கதை தேர்வை பார்த்து வெற்றி வந்த வேகத்திலேயே பின்னங்கால் பிடரியில் அடிக்க சென்றுவிட்டது. நாரதன், பிரம்மா, செய் போன்ற படங்கள் இவருக்கு செய்வினையே வைத்துவிட்டது.

நடிகை தேவயானியின் தம்பியாக இருந்தாலும் தமிழ் சினிமா இப்போது தேவையா தம்பி நீ என கேட்கும் அளவுக்கு நடித்து தள்ளிவிட்டார். இருந்தாலும் வல்லினம் படத்தில் நடித்ததை எல்லாம் பார்த்தால் மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இனியாவது நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் தரமான கதைகளை தேர்வு செய்து நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.