தளபதி66 படத்திற்கு சிக்கனமான இயக்குனர் போதும்.. தயாரிப்பாளர் முடிவால் குழப்பத்தில் விஜய்

தளபதி விஜய் மாஸ்டர் படத்தை அடுத்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இன்னும் தளபதி 65 படத்தின் அப்டேட்களே வெளிவராத நிலையில் தளபதி 66 படத்திற்கான தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பற்றிய அப்டேட்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் தளபதி விஜய்யை வைத்து தளபதி 66 என்ற புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த செய்தி நாளுக்கு நாள் காட்டுத்தீ போல் பரவி ஆரம்பித்தது. விஜய் ரசிகர்களிடையேயும் இந்த கூட்டணிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இயக்குனர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் யோசித்து செயல்பட போகிறார்களாம்.

ஏற்கனவே பிரம்மாண்டமாக படங்கள் தயாரிக்க ஆசைப்பட்டு பல சிக்கல்களில் மாட்டிக்கொண்ட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விஜய்யை வைத்து இயக்கும் படத்திற்கு சிக்கனமாக செலவு செய்யும் இயக்குனரை தேர்வு செய்துள்ளனராம்.

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை இயக்க கதை சொன்ன பாண்டிராஜ், அதே கதையை தளபதி 66 படத்திற்காக தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் படம் இயக்கப் போவதாக செய்திகள் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கிராமத்து படங்களில் விஜய் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளதால் அந்த இயக்குனரை தேர்வு செய்துள்ளார்களாம். தளபதி 65 படத்தை அடுத்த வருட கோடை விடுமுறைக்கும், தளபதி 66 படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளிக்கொண்டுவர விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்