வெப் சீரியஸில் வெளியாகும் வடசென்னை 2.. தியேட்டர்காரர்களுக்கு பீதியை கிளப்பிய வெற்றிமாறன்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் எதிர்பார்ப்புகள் இருக்கும். இதுவரை இருவரின் கூட்டணியிலும் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன.

இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை வைத்து ஒரு படம் இயக்கி கொண்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இதற்கிடையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த செய்தி வழக்கத்திற்கு மாறாக ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெற்றிமாறன் கூறியதாவது, வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக மிக நீண்டகாலம் ஆகும் எனவும், அதனை வெப் சீரியஸாக வெளியிடலாம் எனவும் யோசித்து வருவதாக கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு படத்தை இப்படி வெப்சீரிஸ் மூலமாக வெளியிடுவது தியேட்டர்காரர்களுக்கு செய்யும் துரோகமாகும் என ஒரு பக்கம் குரல் எழும்பியுள்ளது.

ரசிகர்களுக்கும் இதில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லை என்பது போல் தான் தெரிகிறது. ஆனால் இன்னும் இறுதியாக எந்த முடிவும் எடுக்கவில்லை என வெற்றிமாறன் கூறியது ரசிகர்களிடையே கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.